டெங்கு அபாய வலயங்களாக 12 மாவட்டங்கள் பிரகடனம்!

டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து நாட்டின் 12 மாவட்டங்கள் டெங்கு அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கல்முனை, இரத்தினபுரி,கேகாலை ஆகிய 12 மாவட்டங்களே அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மூன்று மாதங்களில் நாடெங்கும் 24,562 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 40 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சு கடந்த 29ஆம் திகதி ஆரம்பித்த தேசிய டெங்கு ஒழிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

முதல் நாளில் மாத்திரம் 83,274 இடங்கள் பரீட்சிக்கப்பட்டன எனவும், இந்த இடங்களில் 1,542 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, 3,389 பேருக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும், 162 பேருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைகள், கட்டட நிர்மாணங்கள் நடந்து வரும் இடங்கள், வணக்கஸ்தலங்கள் போன்றவற்றிலேயே டெங்கு நுளம்புகள் பெருகும் வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like