மாணவி காதலிக்க மறுப்பு: சக மாணவன் செய்த கொடூர செயல்

தமிழகத்தில் காதலிக்க மறுத்த மாணவியை 11- ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பிளேடால் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவரை 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மாணவி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.

இதனிடையே நத்தம் பேருந்து நிலையத்தில் வைத்து மாணவியை வழி மறுத்துள்ள அந்த மாணவன், மாணவியிடம் தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அந்த மாணவி மீண்டும் மறுக்கவே ஆத்திரமடைந்த 11-ம் வகுப்பு மாணவன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனைடையே குறித்த மாணவனும் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார்.

இதையடுத்து இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பட்டப்பகலில் பள்ளி மாணவி, மாணவன் காதல் விவகாரத்தில் பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like