வவுனியாவில் 2பெண்கள் உட்பட 6பேர் வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று (03.04.217) இரவு இரு குழுக்கழுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் இரு பகுதியினரும் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு இரு பகுதியினருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சமாதானப்படுத்தும் நோக்கில் ஒரு பகுதியினர் மற்றைய பகுதியினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதையடுத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதன்போதே ஒருபகுதியினர் வாள் கொண்டு மற்றைய பகுதியினர் மீது வெட்டியுள்ளனர். அதையடுத்து வைத்தியசாலைக்குச் சென்று வெட்டுக்காயத்திற்குள்ளானவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் வைத்து அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது வெட்டுக்காயத்திற்குள்ளான இரு பகுதியினரைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 6பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரகைளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like