வவுனியாவில் 40 ஆவது நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 40 ஆவது நாளாகவும் இன்று (04) தொடர்கிறது.

குறித்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை கடந்த (02) சந்தித்த அமைச்சர் ராஜித சேனாரத்தின காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை  கோரியதற்கிணங்க ஒரு வார காலத்தில் கையளிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் இன்று 12 மணிக்கு பதிவுகளை ஆரம்பிப்பதாகவும், (07) வெள்ளிகிழமை 12 மணிக்கு முன்னர் உறவினர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க தலைவி ஜெயவனிதா தெரிவித்தார்.

You might also like