இறந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தியது குற்றமா..? நீதிபதி மா.இளஞ்செழியன் முன் கேள்வி

இறந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தியது குற்றமா? குற்றம் செய்யாது தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளேன் என யாழ். மேல் நீதிமன்றில், வித்தியா படுகொலை சந்தேகநபர் கேள்வியெழுப்பியுள்ளார்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10வது சந்தேக நபரின் பிணை மனு தொடர்பிலான விசாரணையின் போதே இவ்வாறு மன்றில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10வது சந்தேக நபரான ஜெயவர்த்தன ராஜ்குமார் என்பவரது விளக்கமறியல் நீடிப்பு தொடர்பிலான விசாரணை நேற்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன் போது குறித்த சந்தேகநபர் “தாம் குற்றம் செய்யாது தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். இறந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தியது குற்றமா”..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இருப்பினும் இவரது பிணை மனு தொடர்பில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்த நீதிபதி மா.இளஞ்செழியன், வழக்கினை இன்று செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like