வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான முக்கிய அறிவித்தல்

வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது விபரங்களை உடனடியாக பதிவு செய்யுமாறும், ஒருவார காலத்திற்குள் அவர்களது விபரங்களை அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ளதாகவும் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி கா.ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்த மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் அளிக்க அவர்களின் விபரங்களை கோரியதற்கிணங்க ஒரு வார காலத்தில் விபரங்களை கையளிப்பதாக தெரிவித்திருந்தோம். அதற்காக செவ்வாய்கிழமை முதல் வெள்ளிகிழமை 12 மணிவரை பதிவு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. இதனால் உறவினர்கள் உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்க தலைவி ஜெயவனிதா தெரிவித்தார்.

 

You might also like