கணவனை கொன்று கழிவறை குழியில் புதைத்த மனைவி! குடித்து விட்டு சண்டை போட்டதால் ஏற்பட்ட விபரீதம்

திஸ்ஸமஹாராம, யோதகண்டிய, உத்தகந்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவனை கொலை செய்து வீட்டில் உள்ள கழிவறை குழியில் புதைத்து வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தங்காலை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனபால அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி தனது கணவன் வீட்டில் இருந்து சென்றதாகவும் அன்றில் இருந்து வீடு திரும்பவில்லை எனவும் தெரிவித்து குறித்த பெண் கடந்த மாதம் 18ஆம் திகதி திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மனைவியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில், “எனது கணவன் மதுபோதையில் வீட்டுக்கு வந்து காலை உணவை கேட்டு என்னுடன் சண்டையிட்டார், அப்போது நான் அவரை தள்ளி விட்டடேன், இதனால் அருகில் இருந்த தண்ணீர் தாங்கியில் பட்டு கீழே விழுந்தார். இதன் பின்னரே நான் என் கணவனை தாக்கி கொலை செய்தேன்” என குறித்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதன் பின்னர், வீட்டுக்கு அருகில் புதிதாக வெட்டப்பட்டிருந்த கழிவறை குழியில் உடலை போட்டு மூடியதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

34 வயதான மில்கோயா என்று அழைக்கப்பட்ட வீரசிங்க ஆராச்சிகே பிரியந்த என்பவரே இவ்வாறு மனைவியால் கொலை செய்யப்பட்ட நபர் என மேலும் தெரியவந்துள்ளது.

You might also like