கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தின் கீழ் 985 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானம்

கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தின் கீழ் 985 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தின் கீழான சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்டவாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த கலந்துரையாடலில் மேலும்,

985 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் நீரைச்சிக்கனமாக பயன்படுத்தி, உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தித்தின் கீழ் உள்ள இரணைமடுக்குளம் உள்ளிட்ட கல்மடுக்குளம், அக்கராயன்குளம், புதுமுறிப்பு குளம், பிரமந்தனாறு குளம், கனகாம்பிகைக்குளம் ஆகிய குளங்களில் உள்ள நீரின் அளவுகளைக் கொண்டு பிரமந்தனாறுக்குளம், கனகாம்பிக்கைக்குளம் ஆகிய இரு குளங்களின் கீழும் சிறுதானிய செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் ஏனைய மூன்று குளங்களின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதன் படி அக்கராயன்குளத்தின் கீழ் 1116.5 ஏக்கரும் புதுமுறிப்புக் குளத்தின் கீழ் 985 ஏக்கரும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி கலந்துரையாடலில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன், நீர்ப்பாசனப் பொறியியலாளர் செந்தூரன், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like