14ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவன ஈர்ப்பு போராட்டம் 14ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நீண்ட காலமாக குடியிருக்கும் தமக்கு வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ள காணி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்து, காணி உரிமத்தினை வழங்குமாறு கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், சிவா பசுபதி கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட தீர்வு போன்று தமக்கும் உரிய தீர்வை வழங்குமாறும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.