புனரமைக்கப்பட்ட நிலையில் அக்கராயன்குளம் பாலம்

கிளிநொச்சி அக்கராயன் முறிகண்டி வீதியில் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட அக்கரயான்குளம் பாலம் மற்றும் வீதி என்பன புனரமைக்கப்பட்டுள்ளது.

அக்கராயன்குளம் ஆற்றுக்கான பாலம் மற்றும் வீதி என்பன கடந்த ஆண்டு மே மாதம் பெய்த கடும் மழையினால் சேதமடைந்து மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்டதுடன், குறிப்பிட்ட சில நாட்களுக்கு போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த பாலமானது தற்காலிகமாக புனரமைக்கப்பட்டு போக்குவரத்து நிலைமைகள் சீர் செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை கடந்த ஆண்டு அக்கராயன் முறிகண்டி வீதியின் புனரமைக்கப்பட்ட 10 கிலோ மீற்றர் வீதியின் திருத்த வேலைகளுக்கென இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் தற்போது குறித்த பாலம் மற்றும் அதன் இருபக்க வீதிகளும் புனரமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like