ஆயுதங்களை கடத்திய 4 விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் : விளக்கமறியல் நீடிப்பு

முல்லைதீவில் இருந்து மட்டு நகருக்கு ஆயுதங்களை கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் நால்வரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி எம்.கணேசராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முல்லைதீவில் இருந்து மட்டக்களப்பிற்கு சில ஆயுதங்களை பேருந்தில் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை அடுத்து மேலும் இரு போராளிகள் கைது செய்யப்பட்டதுடன், இவர்கள் நால்வரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த விசாரணை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போது நீதவான் இவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இருவர் கடந்த மாசி மாதம் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like