முல்லைத்தீ வில் த னிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள 42 பேர்!

முல்லைத்தீ வில் த னிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள 42 பேர்!

கொரோனா வைரஸ் பாதுகாப்பு தொடர்பில் முல்லைத்தீ வு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீ வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் முல்லைத்தீ வு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீ வு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சுகந்தன், முப்படையினை சேர்ந்தவர்கள் பொலிசார் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் , செயலாளர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்

இதன்போது முல்லைத்தீ வு மாவட்டத்தில் கொரோனா வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாகவும் முல்லைத்தீ வு மாவட்ட மக்களை பாதுகாப்பதற்காக எவ்வாறான ந டவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஊடகங்களுக்க முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சுகந்தன், மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த ஒரு கொரோனா நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை எனினும் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த 42 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி அவர்களை கண்காணித்து வருகின்றோம். மக்களுக்கான வி ழிப்பு ணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,

மார்ச் 1ஆம் திகதியிலிருந்து இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விபரங்களை தி ரட்டியுள்ளோம். பொதுமக்கள் கூடுகின்ற பிரதேசமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் பங்குனித்திங்கள் உ ற்சவ கா லமாக இந்த மாதம் காணப்படுகின்றது. ஆலய தலைவர் நி ர்வாகிகளை அழைத்து விசேட கூட்டம் ஒன்று நடத்த தீ ர்மானித்துள்ளோம்.

இந்த இடர் நிலையினை பாவித்து கடைகளில் அதிக விலையில் பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நுகர்வோர் அதிகார சபையிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திய அவசிய பொருட்களை கூட்டுறவு சங்கம் ஊடக வழங்க ஏற்பாடுகள் இடம்பெறுகிறது.

எமது மாவட்ட உற்பத்தி பொருட்களை எமது மக்கள் நுகர்வதற்கு தேவையான நடவடிக்கை பிரதேச செயலாளர்கள் ஊடக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like