முச்சக்கர வண்டி ஒன்றினுள் அடைத்துச் செல்லப்பட்ட 16 மாணவர்கள் – சாரதிக்கு எச்சரிக்கை

முச்சக்கர வண்டி ஒன்றினுள் நெருக்கமாக அடைத்த நிலையில் பாடசாலை மாணவர்கள் 16 பேரை எடுத்துச் சென்ற ஆட்டோ சாரதியொருவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

குருநாகல் மாவட்டம் வெல்லவ பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நேற்று (03) நடைபெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டி ஒன்றில் சுமார் 16 மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் மூச்சுவிடக் கூட வழியில்லாத வகையில் அழைத்துச் செல்லப்படுவதைக் கண்ட பொலிஸார் ,முச்சக்கர வண்டி நிறுத்தி சாரதியை நீதிமன்றத்தில் முன்னிறுத்தியுள்ளனர்.

இதன்போது சம்பவம் குறித்து தனது வியப்பை வெளியிட்ட குருநாகல் நீதிபதி சாமர விக்கிரமநாயக்க, குற்றத்தை ஏற்றுக் கொண்ட காரணத்தினால் முச்சக்கர வண்டியின் சாரதிக்கு இரண்டாயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

எனினும் மீண்டும் இவ்வாறான செயற்பாடுளில் தொடர்புட்டால் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நேரிடும் என்றும் முச்சக்கர வண்டியின் சாரதியை நீதிபதி எச்சரித்துள்ளார்.

You might also like