மணல்களை ஏற்றுவதற்கு அனுமதிப்பத்திரம் வேண்டும்: வவுனியாவில் டிப்பர் சாரதிகள் மாபெரும் போராட்டம்

வவுனியாவில் இன்று (05.04.2017) காலை 10.00 மணியளவில் அனுராதபுரம் , வவுனியா , மன்னார் , கிளிநொச்சி , யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மாவட்டங்களின் தாதுப்பொருள் விநியோகத்தர்களின் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் கிரவல்,மணல்,கல் ஏற்றுவதற்கு அனுமதிப்பத்திரம் வேண்டுமேன தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணியோன்று இடம்பெற்றது.

எங்கள் வாகன லிசிங் ஜ எங்கள கட்ட விடுங்கள், வேண்டும் வேண்டும் கிரவல்,மணல்,கல் அனுமதிப்பத்திரம் வேண்டும், கிரவல் மணல் கல் அனுமதிப்பத்திரங்களை உடனடியாக வழங்கு என பல்வேறு வாசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியலாயத்திற்கு முன்பாக ஆரம்பமான இவ் போராட்ட பேரணி கண்டி வீதி வழியாக மணிக்கூட்டு சந்தியை வந்தடைந்து பஜார் வீதியுடாக கொறவப்பத்தானை வீதியுடாக வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்த ஆர்ப்பாட்டகாரர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஞர் ஒன்றினையும் அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

ஆர்ப்பாட்ட இடத்திற்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆர்ப்பாட்டகாரர்களுடன் கலந்துரையாடியதுடன் விரைவில் தீர்வினை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.

இவ் கவனயீர்ப்பு பேரணியில் சுமார் 100க்கு மேற்ப்ட்ட மக்களும் 80க்கு மேற்ப்பட்ட டிப்பர் வாகனங்களும் கலந்து கொண்டிருந்தது.

டிப்பர் சாரதிகளின் போராட்டம் காரணமாக வவுனியா மணிக்கூட்டு சந்தி , ஏ9 வீதி, கோறவப்பத்தானை வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்ப்ட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like