வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் மூவர் கைது

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் மூவர் கைது

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இன்று (21.03.2020) காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரையிலான காலப்பகுதியில் மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்

இலங்கையில் கொ ரோ னா தொ ற்று தீ விரம டைந்து ள்ள நிலையில் நேற்று (20.03.2020) மாலை 6.00 மணி தொடக்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (23.03.2020) காலை 6.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அ முல்படு த்தப்பட் டுள்ள நிலையில் ஊ ரடங்கி ன் போது தே வையற்ற வி தமாக நடமாடிய மூன்று நபர்களையே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு அவர்களில் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் செல்பவர்களுக்கு வவுனியா பொலிஸாரினால் விசேட அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like