வவுனியாவில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற களத்தில் இறங்கிய விசேட அதிரடிப்படையினர்

வவுனியாவில் பொதுமக்கள் நடமாடும் பல இடங்களை சுத்தம் செய்த விசேட அதிரடிப்படையினர்

வவுனியாவில் பொதுமக்கள் நடமாடும் பல இடங்களை இன்று (24.03.2020) மாலை 3.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரையிலான காலப்பகுதியில் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் வவுனியா மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய (24.03) நிலமையில் 101 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவமால் தடுக்கும் பொருட்டு வவுனியா நகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் சுகாதார பிரிவினருடன் இணைந்து மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரினால் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக வவுனியா புதிய பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம் , வங்கிகளிலுள்ள ஏ.ரீ.எம் இயந்திரங்கள் இவ்வாறு விசேட அதிரடிப்படையினரினால் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

You might also like