வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் முதிரை மர பலகைகள் கைப்பட்டப்பட்டுள்ளன

வவுனியா ஈச்சங்குளத்தில் நேற்று (04.04.2017) இரவு 8.30மணியளவில் சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளை கடத்த முற்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஈச்சங்குளத்திலிருந்து நேற்று (04.04.2017) இரவு 8.30மணியளவில் பட்டா ரக வாகனத்தில் முதிரை மரப்பலகைகளை கடத்துவதாக ஈச்சங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரிய ரத்ன தலமையிலான நிர்பான் (87218) , கரன் ( 88562) , பாரதிராஜா (73919) , வித்தான ( 51424) , நவின் ( 2803) , அவதிசங்க 76702 , குணரத்ன ( 87189) , முரிஸ் (86743) ஆகிய பொலிஸாரினால் ஈச்சங்குளம் சந்தியில் வைத்து முதிரை மரக்குற்றிகளை கடத்த பயன்படுத்தப்பட்ட பட்டாரக வாகனத்தினை கைப்பற்றியதுடன் பட்டா ரக வாகனத்தின் சாரதியை ( 45வயது) கைது செய்துள்ளனர்.

44முதிரை மர பலகைள் கைப்பற்றப்பட்டுள்ளதாவும் இதன் பெறுமதி சுமார் இரண்டரை இலட்சம் எனவும் தெரிவித்தனர்.

இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னேடுப்பதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

You might also like