முல்லைத்தீவில் நடமாடும் மருத்துவ சேவை! பொதுமக்களை ப ரிசோ திக்கும் வைத்தியர்கள்

முல்லைத்தீவில் நடமாடும் மருத்துவ சேவை! பொதுமக்களை ப ரிசோ திக்கும் வைத்தியர்கள்

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு நேற்று நடமாடும் மருத்துவ சேவை மு ன்னெ டுக்கப்பட்டுள்ளது.

இதனூடாக பொதுமக்களின் இல்லங்களுக்கு சென்ற மருத்துவ குழுவினர் பொதுமக்களின் இல்லங்களில் நோ யளர்களை சந்தித்த வைத்தியர்கள் ப ரிசோ தித்து மருந்துகள் வழங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி நிரோசினி திலீபன் தலைமையில் வைத்தியர் நிரோசா, சிரேஸ்ட தாதியர் தர்மராசா சுகிந்தராசா, மருந்தாளர், பணியாளர்கள், வாகன சா ரதி உள்ளிட்ட மருத்துவக்குழுவினரால் நடமாடும் சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி இன்று உண்ணாப்புளவு, க ள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, ஆகிய கிராமங்களுக்கு சென்ற வைத்தியர்கள் மருத்துவ சேவையினை வழங்கியுள்ளனர்.

மேலும் இதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் எல்லைக்குட்பட்ட உண்ணாப்பிளவு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு நகரம், கரைச்சிகுடியிருப்பு, செல்வபுரம், முள்ளிவாய்க்கால் கிழக்கு ஆகிய கிராமங்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like