homepage side 2

சற்று முன் இலங்கையில் முதல் தடவையாக கொரோனாவினால் ஒருவர் பலி

சற்று முன் இலங்கையில் முதல் தடவையாக கொரோனாவினால் ஒருவர் பலி

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒருவர் இலங்கையில் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் இலங்கையில் இறந்த முதல் நபர் இவராவார்.

இலங்கையில் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இவவர்களில் 9 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலையில சிகிச்சை பெற்றுவந்த 65 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கொரோனா நோயினால் முதல் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றினால் அங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

65 வயதுடைய குறித்த நபர் மாரவில பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அவர் அதிக இரத்த அழுத்தம் மற்றும் சிறு நீரக பொருத்தும் சத்திர சிகிச்சைக்குட்பட்டவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like