சற்று முன் வவுனியாவில் வீடு தீக்கிரை : பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்

சற்று முன் வவுனியாவில் வீடு தீக்கிரை : பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்

வவுனியா மாடசாமி கோவில் வீதியில் இன்று (30.03.2020) காலை 10.00 மணியளவில் வீடோன்று முற்றாக எரிந்து தீக்கிரையாகியதினால் பல லட்சம் பெறுமதியான உடமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

வவுனியா, மாடசாமி கோவில் வீதியில் உள்ள அரைநிரந்தர வீடு ஒன்றில் வசித்து வந்த குடும்பத்தினர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொருட்கொள்வனவுக்காக வெளியில் சென்ற நிலையில் வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனை அவதானித்த அயலவர்கள் வீட்டு உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதுடன் தீயிணை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், வீட்டில் இருந்த இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

தீ விபத்துக்குரிய காரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like