வவுனியாவில் மருமகனினால் பல்வேறு இன்னல்களை அனுபவித்த வயோதிப தாயாரை முதியோர் இல்லத்தில் இணைத்த ஊடகவியலாளர்கள்

வவுனியாவில் மருமகனினால் பல்வேறு இன்னல்களை அனுபவித்த வயோதிப தாயாரை முதியோர் இல்லத்தில் இணைத்த ஊடகவியலாளர்கள்

வவுனியா கோவில்புதுக்குளம் பகுதியில் மருமகனினால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்த 82 வயதுடைய வயோதிப தாயாரை இன்று (30.03.2020) காலை வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் இணைந்து மீட்டெடுத்து முதியோர் இல்லத்தில் இணைத்து வைத்தனர்.

குறித்த 82 வயதுடைய வயோதிப தாயாரின் இரு பிள்ளைகள் பாவற்குளம் பகுதியில் வசித்து வருவதுடன் ஒரு பிள்ளை மலேசியா நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். ஏனைய இரு பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் குறித்த வயோதிய தாயார் கோவில்புதுக்குளம் பகுதியில் மலேசியா நாட்டிற்கு சென்ற மகளின் வீட்டில் மருமகன் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார்.

இந் நிலையில் மருமகன் வயோதிய தாயாரை பல்வேறு துன்புறுத்தலுக்குள்ளாக்கி வந்த நிலையில் அயலவர்கள் ஆதாரத்துடன் ஊடகவியலாளர்களுக்கு இவ்விடயத்தினை தெரியப்படுத்தியதினையடுத்து குறித்த வீட்டிற்கு அப்பகுதி கிராம சேவையாளர் மற்றும் கிராம சேவையாளர்களின் பொறுப்பாளர் நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டனர்.

அதன் பின்னர் அவ் வீட்டிற்கு சென்ற ஊடகவியலாளர்களாக கதீஷன் , சஜீவன் , வசந்தன் , பிரதீபன் , சசி , திவ்யா ஆகியோர் வயோதிப தயாரின் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் வவுனியா பொலிஸாருக்கும் தகவல்களை வழங்கியிருந்தனர்.அவ்விட்டிற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

தனது மருமகன் தன்னை தகாத வார்த்தையினால் பேசுவதாவும் , அடிப்பதாகவும் தெரிவித்ததுடன் நான் மருந்து குடித்து தற்கொலை செய்வதற்கும் முயன்றுள்ளதாகவும் குறித்த வயோதிப தயார் தெரிவித்தார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்கள் வயோதிப தாயாரின் நிலமையினை கருத்தில் கொண்டு அவரின் சம்மத்துடன் வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு இவ்விடயத்தினை தெரியப்படுத்தியதினையடுத்து அவரின் உதவியுடன் வயோதிப தாயார் முதியோர் இல்லத்தில் இணைக்கப்பட்டார்.

< பெரிய வீடு இருக்கின்ற போதிலும் குறித்த வயோதிப தாயார் வீட்டின் வெளிப்பகுதியில் சிறிய கொட்கையினுள் இருந்த புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன img src="https://www.newsvanni.com/wp-content/uploads/2020/03/help-amma-19.jpg" alt="" width="1200" height="800" class="alignnone size-full wp-image-112182" />

You might also like