வவுனியா, கிளிநொச்சி 19 மாவட்டங்களிலும் உட்பட இன்றிலிருந்து எதிர்வரும் ஆறாம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நீடிப்பு

வவுனியா, கிளிநொச்சி 19 மாவட்டங்களிலும் உட்பட இன்றிலிருந்து எதிர்வரும் ஆறாம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நீடிப்பு

மேல் மாகாணத்திலும், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று இரண்டு மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும், யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் மீள் அறிவித்தல் வரையில் ஊரடங்கு உத்தரவு தொடரும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

You might also like