வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் வீடு தீக்கிரை : உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் வீடு தீக்கிரை : உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் நேற்று (31.03.2020) காலை வீடொன்று பகுதியளவில் எரிந்து தீக்கிரையானதில் பல லட்சம் பெறுமதியான உடமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் குறித்த வீட்டின் இறைவழிபாட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த விளக்கின் மூலம் தீ அறை முழுவதும் பரவியது. இதனை அவதானித்த வீட்டின் உரிமையாளர் அயலவர்களின் உதவியுடன் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இக் குடும்பத்தின் நிலமையினை அறிந்த வவுனியா ஊடகவியளார்களான பாஸ்கரன் கதீஷன் , ராஜேந்திரன் சஜீவன் ஆகியோர் நேரில் குறித்த வீட்டிற்கு சென்று அவர்களின் நிலமையினை அறிந்து அவர்களுக்கு 2000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதியினை வழங்கி வைத்தனர். நோர்வே நாட்டை சேர்ந்த சுபாஸ்கரன் வசந்தா இதற்கான நிதி உதவியினை வழங்கி வைத்தார்.

You might also like