எங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

தங்களை எல்லோரும் கைவிட்டு விட்டனர் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

நாற்பத்தைந்தாவது நாளாக தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆகப்பட்டவர்களின் போராட்டம் இன்று 05-04-2017 நாற்பத்தைந்தாவது நாளாக தொடர்கிறது.

கடந்த  20-02-2017  அன்று   காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக  தொடர்கிறது. தங்களை அனைவரும் கைவிட்டுள்ளதாகவும்,  45 ஆவது நாளாக தாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்குள் மத்தியில் காணாமல் ஆக்ப்பட்ட தங்களின் உறவுகளுக்காக  அவர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எதிர்பார்த்து கவனயீர்ப்பை ஆரம்பித்த   போதும்  இந்த போராட்டததை எவரும் கண்டுகொள்ள வில்லை என்றும் கவலை தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

அடுத்த வரும் நாட்களில்  தாங்கள் தங்களின்  போராட்ட வடிவத்தை மாற்றும் வகையில் கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவம் தெரிவித்தனர். அந்த வைகயில்  மாவட்ட மட்டத்தில் அரச நிர்வாக கட்டமைப்பை முடக்கி  காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி  போராட்டவுள்ளதாகவம்  கவனயீர்ப்பில் ஈடுப்பட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like