உறவுகளை வீடுகளுக்குள் மு டக்கிய கொ ரோனா! க ளமிறங்கிய இ ளைஞர்கள்

உறவுகளை வீடுகளுக்குள் மு டக்கிய கொ ரோனா! க ளமிறங்கிய இ ளைஞர்கள்

நமது நாட்டில் ஒவ்வொரு மு றையும் நெ ருக்கடியான கால கட்டங்களில் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து உதவிக்கரம் நீ ட்டுவது இன்று நேற்று நடப்பது அல்ல. நாம் பல காலமாக இடம்பெயர்ந்து உணவின்றி தவித்த போது ஏற்பட்ட பண்பாடு.

அதன் தொடர்ச்சியாக எல்லா காலகட்டத்திலும் நமது இளைஞர்கள் களத்தில் இறங்கி வேலை செய்வதற்குப் பின்நின்றது இல்லை என்பது வரலாறு. இடப்பெயர்வுகள், வெள்ள அ னர்த்தங்கள், மண் ச ரிவுகள் என்று எத்தனை இடர்கள் வந்தாலும் உறவுகளை வீழ்ந்துவிடாது கைகோர்த்து தாங்கி நிற்கும் மகத்தான சேவையை செய்கிறார்கள் எமது இளைஞர்கள்.

இன்று கொ ரோனா வை ரஸ் உலகை ஆ ட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. வல்லரசு தேசங்களே பொருளாதாரத்தில் சரிந்து கொண்டிருக்கிறது. நமது தேசமும் அதற்கு விதிவிலக்கல்ல.

தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியில், பொது மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை உடனடியாக கொ ண்டு சேர்ப்பதும், அவர்களின் வயிற்றுப் பசியாறுவதும் அவசரத் தேவையாக இருக்கிறது.

நமது இளைஞர்கள் அதற்காக முழு மூச்சோடு உழைத்துக் கொ ண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் பல பகுதிகளில் அன்றாடத் தேவைகளுக்காக பொது மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெளியே போக முடியாத சூழ்நிலை.

இந்நிலையில், உஷாந்தன் தலைமையிலான இளைஞர்கள் குழுவும் தாங்களாகவே ஒன்றிணைந்து இச்சேவையினை செய்திருக்கிறார்கள். பொது மக்களுக்காக இணைந்த இளைஞர்களின் இந்த முயற்சிகளை நமது இணையத்தளம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ ள்கிறோம்.

You might also like