இன்று முதல் 10 நாட்களுக்கு சூரியன் நேரடி உச்சம் : உச்சம் அதிகமாக உள்ள இடங்களும் வெளியாகின

இன்று முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பலப் பகுதிகளில் வெப்பநிலை 34 செல்சியஸ்க்கும் அதிகமாக காணப்படும் எனவும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும்  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஹம்பாந்தோட்டை, நாகியாதெனிய, கட்டம்பே மற்றும் மலிதுவ ஆகிய பகுதிகளில் சூரியனின் உச்சம்  மிகவும் அதிகமாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த 10 நாட்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் நீர் அருந்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

You might also like