வவுனியா மக்களே உங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்கவில்லையா..? இதோ அரசாங்க அதிபரின் அறிவிப்பு..!!
வவுனியா மக்களே உங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு கிடைக்கவில்லையா..? இதோ அரசாங்க அதிபரின் அறிவிப்பு..!!
வவுனியாவில் நாளையதினம் (06.04.2020) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விசேட நடவடிக்கைகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் தொடர்பு கொண்டு வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்ட உள்ளுர் விவசாயிகள் அவர்களது உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதினாலும் எமது மாவட்டத்திற்கு தேவையான உற்பத்திகள் இங்கு தேவையான அளவு காணப்படுவதினாலும் உள்ளுர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வெளிமாவட்டங்களிலிருந்து உற்பத்திகளை வவுனியா மாவட்டத்திற்கு கொண்டு வர தடை செய்யவதற்கு முடிவு செய்துள்ளோம். எனவே இதனை வெளி மாவட்ட விவசாய உற்பத்தி ஏற்றுமதியாளர்கள கருத்து கொண்டு செயற்படுமாறும் தெரிவித்ததுடன்,
வெளிமாவட்டங்களிலிருந்து (கொ ரோனா அ பாயம் ஏற்ப ட்டுள்ள மாவட்டங்கள்) எமது மாவட்டத்திற்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் ஈரட்டைபெரியகுளம் பகுதியில் தொ ற்றுநீக் கிய பின்னரே வவுனியா நகரினுள் அனுமதிக்கப்படுகின்றது.
மேலும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சமூர்த்தி கொடுப்பணவுகள் தொடர்பில் முறைப்பாடுகள் எதேனும் உள்ள பட்சத்தில் எனது அலுவலக தொலைபேசி இலக்கமான 024 – 2222235 என்ற இலகத்திற்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அரசாங்க அதிபர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.