பிரான்ஸ் தொடுவானம் அக்கராயன் மகா வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி – அக்கராயன் மகா வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக குறித்த உதவி திட்டம் இன்று (05) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பழைய மாணவர் ஒன்றியம் பிரான்ஸ் வாழ் நண்பர்களின் “தொடுவானம்” என்ற நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலய மாணவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உதவிக்கு தங்கள் பங்களிப்பினை தந்துதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக அக்கராயன் மகா வித்தியாலய பாடசாலை நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like