யாழ்ப்பாணத்தில் பிடிபடும் போதைப்பொருட்களின் பின்னணியில்…..

யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களின் பின்னணியில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் உடந்தையாக உள்ளனர்.

கேரள கஞ்சா கிலோ கணக்கில் கைப்பற்றும் பொலிஸார் ஏன் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை.

போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் நாடகம் அரகேற்றப்படுகின்றது.

வடக்கில் பாதுகாப்பு படையினரை நிலைநிறுத்துவதற்காக நாடகம் அரகேற்றப்படுகின்றது.

இதன் பின்னணி இடம்பெயர்ந்தவர்களை அகதி முகாம்களில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான நாடகமா என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.

காணாமல் போனோர் , காணி விடுவிப்பு போன்ற விடயங்களுக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்களுக்கு ஜனாதிபதி வழங்கப் போகும் பதில் என்ன? தமிழ் மக்களுக்கு நீதிமன்றம் என்ன நீதி வழங்க போகின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் பிரதமர் நீதியரசர் ,உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் , மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like