வங்கி அட்டையை திருடி 15 முறை கொள்ளையடித்த பெண்

வேறு நபருக்கு சொந்தமான வங்கி கடன் அட்டையை திருடி பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் 15 தடவைகள் அட்டையை பயன்படுத்தி, 5 வங்கி கிளைகளில் பணம் பெற்றுக்கொண்ட நிலையில் நீர்கொழும்பு குற்ற விசாரணை பிரிவினரால் நேற்று செய்துள்ளனர்.

குறித்த பெண் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சதலங்காவ பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற 84 வயதான பெண் அரசாங்க அதிகாரி ஒருவரின் கடன் அட்டையை, திருடப்பட்டே இந்த பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

வங்கி அட்டைக்கு சொந்தமான பெண்ணின் நினைவாற்றல் குறைவென்பதனால், கடன் அட்டைக்கான இரகசிய இலக்கத்தை நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

இதனை அறிந்து கொண்ட மோசடி பெண், அவரின் கைப்பை திருடி இரகசிய இலக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரையான காலப்பகுியில் நீர்கொழும்பு, சீதுவ, ரந்தொளுகம, மினுவங்கொடை, கம்பஹா நகரங்களில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தின் ஊடாக, 15 தடவைகள் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

You might also like