வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு அ வசர அ றிவித்தல்

வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு அ வசர அ றிவித்தல்

வவுனியா மாவட்டத்தில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தமது சொந்த பிரதேசங்களுக்கு செல்ல முடியாது நெ ருக்கடியில் உள்ளார்கள். அவர்களை சமூக பாதுகாப்பை உ றுதிப்படுத்தி அவர்களின் சொந்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைப்பதற்குறிய பொ றிமுறையொ ன்றை உருவாக்கியுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொழில் நிமித்தமும், கற்றல், கற்பித்தல், மருத்துவ சிகிச்சைகள், வணிகம் உள்ளிட்ட இ தர பல காரணங்களுக்காக வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குறிய நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம். எனவே வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் உடனடியாக வவுனியா பிரதேச செயலகம் அல்லது , கிராம சேவையாளர் ஊடாக உடனடியாக பதிவுகளை மேற்கொள்ளவும் ,

மேலும் வவுனியாவில் தங்கியுள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பெருமளவானவர்கள் குடும்பத் தலைவர்களாக இருப்பதால் அவர்களின் குடும்பங்கள் அன்றாடப் பொருட்களை பெறுவதிலிருந்து பல விடயங்களில் இ ன்னல்களு க்கு மு கங்கொடுத்த வண்ணமுள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டே இவ் செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like