நாடு முழுவதும் இன்று மின்சாரம் தடைப்படும் அபாயம்

நாடு தழுவிய ரீதியில் மின்சார துறை சார்ந்த தொழில் சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இதன் காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட கூடிய வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பளம் அதிகரித்தல் உட்பட பல கோரிக்கைளை முன்வைத்து பணி பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் 32 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மின்சார வாடிக்கையாளர் சேவை இடங்களில் பணியில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களுக்கு, மின்சக்தி கட்டுப்பாட்டு அதிகாரியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ரஞ்சன் ஜயலால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like