வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியுடான போக்குவரத்து த டை : அ திரடியாக செயற்பட்ட குழுவினர்

வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியுடான போக்குவரத்து த டை : அ திரடியாக செயற்பட்ட குழுவினர்

வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் காணப்பட்ட பழமை வாய்ந்த மரமொன்று இன்று (08.04.2020) மாலை 4.00 மணியளவில் மு றிந்து வி ழ்ந்தமையி னால் குறித்த வீதியுடான போக்குவரத்து பா திப்பட்ட துடன் பல சேவைகளும் தடைப்பட்டன.

வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே காணப்பட்ட ப ழமை வாய்ந்த மரமொன்று முறிந்து வீ ழ்ந்தமையி னால் குறித்த வீதியூடான போக்குவரத்து பா திப்படைந் ததுடன் மின்சாரம் மற்றும் இலங்கை தொலைத் தொடர்பு தொலைபேசி இணைப்பு வயர்களும் அறுந்தன.

அயலவர்கள் உடனடியாக வவுனியா நகரசபை , மின்சார சபை , இலங்கை தொலைத் தொடர்பு நிலையத்தினர் போன்றவர்களுக்கு தெரியப்படுத்தியமையினையடுத்து உடனடியாக குறித்த இடத்திற்கு வருகை தந்து மின்சாரசபையினர் உடனடியாக மின்சாரத்தினை சீர் செய்ததுடன் இலங்கை தொலைத் தொடர்பு நிலையத்தினர் தொலைபேசி இணைப்பிணையும் சீர் செய்தனர்.

அதன் பின்னர் வவுனியா நகரசபையினர் உடனடியாக மரத்தினை அ கற்றி வீதியூடான போக்குவரத்தினை சீர் செய்தனர்.

You might also like