அதிவேகப் பாதையில் பற்றி எரிந்த பஸ்! சாரதியால் உயிர் தப்பிய பயணிகள்
தெற்கு அதிவேகப் பாதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுதீ பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுவலையிலிருந்து காலி நோக்கி பயணித்த பஸ் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.
பஸ்ஸில் இருந்து புகை மணம் ஒன்று எழுந்து்ளளதால், அதை நுகர்ந்த சாரதி பஸ்ஸைவிட்டு இறங்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த பஸ்ஸில் ஏற்பட்ட தீயை தெற்கு அதிவேகப் பாதையில் உள்ள அதிகாரிகள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ காரணமாக பயணிகளுக்கோ, சாரதிக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார்தெரிவித்துள்ளனர்.