வவுனியா மாவட்ட வர்த்தர்கள் , பொதுமக்களுக்கு அரசாங்க அதிபர் அ வசர அ றிவித்தல்

வவுனியா மாவட்ட வர்த்தர்கள் , பொதுமக்களுக்கு அரசாங்க அதிபர் அ வசர அ றிவித்தல்

வவுனியா ஊ ரடங்கு ச ட்ட த ளர்வு நேரத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துல சேன அவர்கள் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாளை (09.04) காலை 6.00 மணிக்கு வவுனியாவில் ஊ ரடங்குச் ச ட்டம் தள ர்த்தப்பட்டு பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன்போது வ்ங்கிகள் , விவசாயம் சம்பந்தமான திணைக்களங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள், மருந்தகம், எ ரிபொருள் நிரப்பு நிலையம் என்பன மாத்திரமே தி றப்பதற்கு தீ ர்மானிக் கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் ஊ ரடங்கு ச ட்டம் நடைமுறைக்கு வருவதால் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் முகமாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வர்த்தக நிலையங்களை பூட்டி ஒத் துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

வவுனியா காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த மரக்கறி வியாபார விற்பனை நிலையங்கள் அனைத்தும் வவுனியா காமினி மகா வித்தியாலய மைதானத்திற்குள் மாற்றப்பட்டு மன்னார் வீதியுடான போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அத்தியாவசிப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக கூடுவதை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார் என தெரிவித்தார்.

You might also like