வவுனியாவில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களை புற க்கணித்து அரச உத்தியோகத்தருக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கிய உத்தியோகத்தர்

வவுனியாவில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களை பு றக்கணித்து அரச உத்தியோகத்தருக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கிய உத்தியோகத்தர்

வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வ றுமைக் கோ ட்டிற்கு உட்பட்ட பல மக்களை புறக்கணித்து அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கிய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமுர்த்தி விண்ணப்பம் கோரப்பட்ட போது பண்டாரிக்குளம் பகுதியில் விண்ணப்பங்களை நிரப்பிய சமுர்த்தி உத்தியோகத்தர் ஒவ்வொரு விண்ணப்பத்தாரியிடமும் இருந்து 320 ரூபாய் மற்றும் 500 ரூபாய் பணத்தை அறவீடு செய்துள்ளார். இதன்போது அரச உத்தியோகத்தர் ஒருவரிடமும் 320 ரூபாய் பணம் பெற்று விண்ணப்பத்தை வழங்கி கையொப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்துள்ளனர்.

தற்போது சமுர்த்திப் பயனாளிகளுக்கு 5000 ரூபாய் பணம் கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஏற்கனவே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட பலருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலையில், அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு 5000 ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பலரும் விசனம் தெரிவித்தையடுத்து குறித்த பணம் தவறுதலாக வழங்கப்பட்டதாக கூறி அப் பணத்தை இன்று மீளத் தருமாறு கோரி சமுர்த்தி உத்தியோகத்தர் இன்று மீளப் பெற்றுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு கிராமங்களிலும் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகளை தெரிவு செய்யும் போது அவர்களது குடும்ப நிலை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் அவ்வாறு எதுவும் கவனம் செலுத்தாது சமுர்த்தி கொடுக்கப்பட வேண்டிய பலருக்கு கொடுப்பனவுகளை வழங்காது, பெயர் வரவில்லை என கூறி அனுப்பி விட்டு அரச உத்தியோகத்தருக்கு அப்பணத்தை வழங்கியமை குறித்து அக் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சமுர்த்திக் கொடுப்பனவைப் பெற்றுக் கொண்ட அரச உத்தியோகத்தர் தனக்கு அப்பணம் வழங்க முடியாது என்பதை தெரிந்து கொண்டதும் தானாகவே சென்று அப்பணத்தை மீள யைகயளித்துள்ளதுடன், தம்மிடம் விண்ணப்பம் நிரப்ப பெற்றுக் கொண்ட பணத்தை மீள வழங்குமாறும் கோரியுள்ளார்.

You might also like