வவுனியா மாவட்ட அரிசி ஆலைகளுக்கு அரசாங்க அதிபரின் அதிரடி உத்தரவு : மகிழ்ச்சியில் மக்கள்

வவுனியா மாவட்ட அரிசி ஆலைகளுக்கு அரசாங்க அதிபரின் அதிரடி உத்தரவு : மகிழ்ச்சியில் மக்கள்

வவுனியா மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்வரும் இரண்டு கிழமைகளுக்கு வவுனியா மாவட்டத்தின் உடைய அரிசி அரிசி கிடைப்பனவை உறுதிப்படுத்துவதற்காக வவுனியா மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரிசியினை கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அந்த அரிசி கொண்டு செல்ல தடை செய்யுமாறு அரசாங்க அதிபரினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி. தினேஷ்குமார் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பில் வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் வவுனியா மாவட்டத்தில் காணப்படுகின்றன நிலைமைகளை ஆராய்ந்து செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் (23.04.2020) காலை 10.00 மணிக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது

இக் கூட்டத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் காணப்படுகின்ற நிலைமைகள் சம்பந்தமான விடயங்கள் ஆலோசிக்கப்பட்டது. இதில் சுகாதாரத் திணைக்களத்தின் உடைய வேண்டுகோளுக்கு அமைவாக வவுனியா மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்களின் உடைய போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகன சாரதிகள் மற்றும் உதவியாளர்களின் இரத்த மாதிரிகளை பெற்று அதனை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஊரடங்கு விதிக்கப்பட்ட காலப்பகுதியில் அரசாங்கத்தினால் ஆபத்து பிரதேசங்களாக குறிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து எமது மாவட்டத்திற்கு எந்த விதமான சுகாதார அனுமதிகளும் இல்லாமல் சில நபர்கள் வருவதனை அவதானிக்க கூடியதாக இருந்தது ஆகவே மாவட்டத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்து சம்பந்தமாக சிந்தித்து நாங்கள் வவுனியா மாவட்டத்திற்கு உள்நுளைகின்ற நுழைவாயில் இப்படியான வருகை தருபவர்களின் பரிசோதிப்பதற்கு உரிய நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரினால் பொலிஸ் துறையினருக்கும் இராணுவ தரப்பினருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

மேலும் அண்மைக்காலமாக வவுனியா மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விலையில் அரிசி பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் எதிர்நோக்குவதாக வவுனியா வர்த்தகர் சங்கம் அரசாங்கத்துக்கு முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையாகக் கொண்டு நேற்றைய தினம் அரசாங்க அதிபரினால் வவுனியா மாவட்ட தனியார் அரிசி ஆலைகள் சங்கத்தோடு ஒரு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் அவர்கள் அரசினுடைய கட்டுப்பாட்டு விலைக்கு வர்த்தக சங்கத்தினருக்கு அரிசியினை வழங்குவதற்கு உடன்பாடு இருக்கின்றார்கள். அது தொடர்பில் அந்த அரிசி கிடைப்பனவுகள் பற்றாக்குறையாக இருக்குமாக இருந்தால் வெளி மாவட்டங்களிலிருந்து அரிசியினை வவுனியா மாவட்டத்திற்கு கொண்டுவர அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசாங்க அதிபரினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

அதற்கு மேலதிகமாக எதிர்வரும் இரண்டு கிழமைகளுக்கு வவுனியா மாவட்டத்தின் உடைய அரிசி அரிசி கிடைப்பனவை உறுதிப் படுத்துவதற்காக வவுனியா மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரிசியினை கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அந்த அரிசி கொண்டு செல்ல தடை செய்யுமாறு அரசாங்க அதிபரினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுகாதாரத் திணைக்களத்தின் உடைய வேண்டுகோளுக்கு அமைவாக மறு அறிவித்தல் வரை வவுனியா மாவட்டத்தில் உள்ள அழகு நிலையங்களை திறக்காமல் இருப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. என தெரிவித்தார்

You might also like