வவுனியாவில் வீதிகளில் மாக்ஸ் அணியாத மக்களுக்கு எ ச்சரிக் கை : விசேட பொலிஸார் களத்தில்
வவுனியாவில் வீதிகளில் மாக்ஸ் அணியாத மக்களுக்கு எ ச்சரிக் கை : விசேட பொலிஸார் களத்தில்
உ டல் நி லையில் கவனம் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்த மாஸ்க், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. கொ ரோனா வை ரஸிடமிருந் து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்கிறார்கள்.
இலங்கையில் அனைவரும் கட்டாயம் மாக்ஸ் அணியுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் பொரும்பாலன மக்கள் அரசாங்கத்தின் உத்தரவினை பொருட்படுத்தாது மாக்ஸ் அணியாது செல்வதினையடுத்து வவுனியா மாவட்ட கொ ரோனா த டுப்பு பொலிஸ் பிரிவினர் இன்று (24.04.2020) வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாக்ஸ் அணியாது செல்லாது செல்பவர்களை மறித்து எ ச்சரிக் கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு மாக்ஸ் அணியாது செல்வர்களை எ ச்சரிப்ப து மாத்திரம் அல்லாது அவர்களது வாகனத்தினை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு மாக்ஸ் வாங்கி அணிந்து வந்து வாகனத்தினை எடுத்துச்செல்லுமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு பணிப்புரை விடுத்தனர்
பொலிஸாரின் இச் செயற்பாடு வவுனியா மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது.