வவுனியாவில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெ ட்டப்பட்ட கு ழியில் வீ ழ்ந்து முதியவர் ம ரணம்

வவுனியாவில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெ ட்டப்பட்ட கு ழியில் வீ ழ்ந்து முதியவர் ம ரணம்

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெ ட்டப்ப ட்ட கு ழியில் வீ ழ்ந்து முதியவர் ஒருவர் ம ரணம டைந்துள்ளார்.

நேற்று (24.04.2020) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பாரதிபுரம் வீதியில் தற்காலிகமாக வசிக்கும் முதியவர் ஒருவர் வீட்டில் இருந்து இரவு த ங்குவதற்காக கற்பகபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது மன்னார் பிரதான வீதிக்கு அண்மித்ததாக பாரதிபுரம் வீதியின் ஓரமாக பேராறு நீர்பாசன நடவடிக்கைக்காக வெ ட்டப்ப ட்ட கு ழி ஒன்றில் துவிச்சக்கர வண்டியுடன் வீ ழ்ந்து, கு ழியில் இருந்த நீரில் மூ ழ்கி ம ரணமடை ந்துள்ளார்.

இன்று (25.04.2020) காலை வீதியால் சென்றவர்கள் குறித்த குழியில் ஒருவர் வீழ்ந்து இ றந்து கி டப்ப தை அவதானித்து வவுனியா பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதில் ஜெயபத்ம புலேந்திரன் என்ற 68 வயதுடைய நபரே ம ரணமடை ந்தவரா வார்.

நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையே இந்த அ சம்பாவி தம் இடம்பெற காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like