சற்று முன் வெளியான அதிரடி உத்தரவு : வவுனியாவில் நாளையதினம் மூடப்படுகின்றது வர்த்தக நிலையங்கள்

சற்று முன் வெளியான அதிரடி உத்தரவு : வவுனியாவில் நாளையதினம் மூடப்படுகின்றது வர்த்தக நிலையங்கள்
வவுனியா நகரப்பகுதியை சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதால் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட அரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெலிசறை இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் வவுனியா, மகாகச்சகொடி பகுதிக்கு வந்த கடற்படை வீரருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கடற்படை வீரர் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார். இதனால் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவுள்ளனர்.
குறித்த கடற்படை வீரர் சென்ற இடங்களை முழுமையாக தனிமைப்படுத்துவதற்காகவும், நகரை மருந்து தெளித்து சுத்திகரிப்பு செய்வதற்காகவும் சுகாதார துறையின் ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்படுகிறது. எனவே மக்கள் தமது நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், வர்த்தக நிலையங்களை பூட்டி கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரச அதிபர் கோரியுள்ளார்.