சற்று முன் சங்குப்பிட்டியில் த டுத்து நி றுத்தப் பட்ட விக்கினேஸ்வரன்; ‘த னிமைப்ப டுத்தல் றிப்போர்ட்’ கேட்கும் பொலிஸார்

சற்று முன் சங்குப்பிட்டியில் த டுத்து நி றுத்தப் பட்ட விக்கினேஸ்வரன்; ‘த னிமைப்ப டுத்தல் றிப்போர்ட்’ கேட்கும் பொலிஸார்

முள் ளிவாய்க்கால் நி னைவேந் தலை முன்னிட்டு கொ ல்லப்ப ட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து மு ள்ளிவா ய்க்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட அவர்கள் சங்குப்பிட்டியைச் சென்றடைந்த போது நிறுத்தப்பட்டதாக விக்கினேஸ்வரன் அங்கிருந்து தெரிவித்தார். அரை மணி நேரத்துக்கும் அதிகமாக தம்மைத் த டுத்து வைத்துள்ள படையினர், தம்மிடம் “த னிமைப்ப டுத்தல் றிப்போர்ட்” கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வீட்டிலேயே இருப்பதாகவும், உரிய சுகாதார முறைப்படிதான் மு ள்ளிவா ய்காலுக் குச் செல்வதாகவும் தெரிவித்த விக்கினேஸ்வரன், நேற்றிரவே இதற்கான அனுமதியை பொலிஸாரிடமிருந்து தான் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் பதிலளித்திருக்கின்றார். இருந்த போதிலும், மேலிடத்துடன் தொடர்புகொள்வதாகத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவர்களைத் தொடர்ந்தும் த டுத்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக தெரிவித்த விக்கினேஸ்வரன், தாம் அனைவரும் உரிய சுகாதார முறைப்படி முகக் கவசம் அணிந்த வாறு, ஒரே வாகனத்தில் வராமல் பல வாகனங்களில் பத்துப் பேர் மட்டுமே வந்ததாகவும் குறிப்பிட்டார். விக்கினேஸ்வரனுடன் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன், சிற்பரன் உட்பட சுமார் பத்துப்பேர் மட்டுமே வந்திருப்பதாகத் தெரிகின்றது.

You might also like