வவுனியா மாவட்ட இளைஞர்களினால் மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி

வவுனியாவில் 42 வது நாளாக நடைபெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (06-04) வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.

வவுனியா பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட வவுனியா இளைஞர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு மன்னார் வீதி வழியாக மணிக்கூட்டு கோபுர சந்தியை வந்தடைந்து அங்கிருந்து பசார் வீதி வழியாக வவுனியா கண்டி வீதியில் உணவு தவிர்ப்ப்பில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் போன்ற கோசங்களுடன் தீர்க்கமான பதிலை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியிருந்தனர்.

You might also like