homepage side 2

இன்றைய ராசிபலன் 23.05.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 23.05.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வரலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது கவனமாக பேசவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். எதையும் செய்வதற்கு முன் யோசித்து முடிவு பண்ணுங்க. நெருங்கியவர்களின் உதவியுடன் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்கவும் வீட்டில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்:

உங்க ராசிக்குள் நான்கு கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். பொறுமையாக இருங்க நிதானமாக இருந்தால் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்:

உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். பணவரவு வந்தாலும் கூடவே செலவுகளும் தேடி வரும். பல நாட்கள் எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பராக மாறும் நிலை வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க.

கடகம்:

உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் சேர்ந்திருப்பதால் உங்களுக்கு சுப செய்திகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவால் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

சிம்மம்:

உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்கள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். கணவன் மனைவி இடையே சின்னச் கருத்து வேறுபாடுகள் வரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கன்னி:

ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். பணம் சேமிக்கலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியோடு நெருக்கம் கூடும். காதல் துணையோடு ரொமான்ஸ் ஏற்படும்.

துலாம்:

எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களை தவிர்த்து விடுங்கள். வேலை செய்யும் இடத்தில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது உத்தமம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.

விருச்சிகம்:

உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கிரகங்கள் கூடியுள்ளன. உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும். வியாபாரிகள் புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். பயணங்களை தவிர்த்து விடுங்கள்.

தனுசு:

உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் நான்கு கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு நன்றாக . சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வியாபாரம் லாபகரமாக நடக்கும். நெருக்கடிகள் தீரும். எதிரிகள் தொல்லை முடிவுக்கு வரும்.

மகரம்:

உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான புத்திர ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் இன்றைக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல், வீண் செலவுகள் உண்டாகலாம். சிக்கனமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் இன்று அனைவரையும் அனுசரித்து செல்லுங்கள்.

கும்பம்

சந்திரன் உள்ளிட்ட நான்கு கிரகங்கள் நான்காம் வீட்டில் சேர்ந்து உள்ளன. இன்று உங்களுக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இணைந்து லாபம் அடைவீர்கள். உத்தியோக ரீதியான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்:

சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.

You might also like