தனியார் பேருந்து கட்டணங்களில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

தனியார் பேருந்து கட்டணங்களில்

தனியார் பேருந்து கட்டணங்களை அதிகரிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொ ரோனா அ ச்சம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பயணிகளையே பேருந்தில் ஏற்றுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் போதிய வருமானம் கிடைக்காமையால் பயணக் கட்டணங்களை ஒன்றரை மடங்கில் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் கட்டண அதிகரிப்பு குறித்து இதுவரை முறையான தீர்மானங்கள் எதுவும் எட்டப்படவில்லையென போக்குவரத்து அமைச்சர் மஹிந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் ஊ ரடங்கு த ளர்த்தப்படவுள்ள நிலையில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்தினை வழமைபோல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணயங்களின் போது உரிய சுகாதார முறைகளை கடைப்பிடிக்குமாறு அமைச்சர் பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like