சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சி கிளிநொச்சியில்

சமுர்த்தி அபிமானி 2017  எனும் வர்த்தகக் கண்காட்சி  இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது

சமுர்த்தி பயனாளிகளின்  உற்பத்திகளின்  கண்காட்சியும் விற்பனையும்  இன்று காலை கிளிநொச்சி  டிப்போசந்தியில்  கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால்  சம்பிரதாய பூர்வமாக  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

புதுவருடப்பிறப்பை  முன்னிட்டு  ஆரம்பிக்கப ட்டுள்ள இக் கண்காட்சியானது  இன்றும் நாளையும் நடைபெற  உள்ளது  இக் கண்காட்சியில் அனைத்துப் பொருட்களையும் நியாயமான சந்தைவிலையில் பெற்றுக்கொள்ள  முடியும் என ஏற்பாட்டாளர்கள்  தெரிவிக்கின்றனர்

You might also like