இன்றைய ராசிபலன் 02.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 02.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

மேஷம் பொதுப்பலன்கள்:

இன்று மிகவும் சிறப்பான நாள். உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் தைரியம் காரணமாக வெற்றியும் திருப்தியும் அடையலாம்.

மேஷம் வேலை / தொழில்:

இன்று நீங்கள் தன்னிச்சையாகப் பணி புரிந்து பாராட்டைப் பெறுவீர்கள்.

மேஷம் காதல் / திருமணம்:

உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் நேர்மையாக வெளிப்படுத்துவீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் ஏற்படும்.

மேஷம் பணம் / நிதிநிலைமை:

இன்று நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். இதனால் மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்திருக்கும்.

மேஷம் ஆரோக்கியம்:

இன்று நீங்கள் ஆற்றலுடனும் முழு ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.

மேஷம் ஆரோக்கியம்:

இன்று உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:

ரிஷபம் பொதுப்பலன்கள்:

இன்றைய நாள் இயந்திர கதியில் இயங்கும். இது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். இன்றைய சவால்களை சந்திக்க நீங்கள் திட்டமிட்டு செயல் பட வேண்டும்.

ரிஷபம் வேலை / தொழில்:

பணியில் வளர்ச்சி சிறப்பாக காணப்படாது.பணிகள் அதிகமாக காணப்படும். அதற்கேற்றபடி திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

ரிஷபம் காதல் / திருமணம்:

இன்று உங்கள் துணையுடன் நல்லுறவை வளர்க்க இயலாது. குடும்ப பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடனான உறவில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.

ரிஷபம் பணம் / நிதிநிலைமை:

பொறுப்புகள் அதிகம் இருப்பதால் தேவையற்ற செலவுகள் காணப்படும். எனவே பணத்தை சாதுரியமாக செலவு செய்ய வேண்டும்,

ரிஷபம் ஆரோக்கியம்:

இன்று தோல் எரிச்சலால் பாதிப்பு காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் வைப்பது நல்லது. மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.

மிதுனம்:

மிதுனம் பொதுப்பலன்கள்:

இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. இன்று சிறிய விஷயங்களுக்குக் கூட எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். இன்று மனதில் சமநிலையோடு இருங்கள். இனிய இசை கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

மிதுனம் வேலை / தொழில்:

இன்று பணிகள் கடினமாக காணப்படும். நிலுவையில் உள்ள பணிகளை திறமையாகக் கையாண்டு குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க வேண்டும்.

மிதுனம் காதல் / திருமணம்:

உங்கள் துணையிடம் வேறுபாட்டை வெளிப்படுத்துவீர்கள். உரையாடலின் போது கவனம் தேவை.

மிதுனம் பணம் / நிதிநிலைமை:

குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் காரணத்தால் பணம் செலவாகும்.அதிகரிக்கும் செலவுகளை சுமையாக உணர்வீர்கள்.

மிதுனம் ஆரோக்கியம்:

இன்று சளி / இருமல் பாதிப்பு காணப்படும். குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்த்தல் நல்லது.

கடகம்:

கடகம் பொதுப்பலன்கள்:

இன்று உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்று அதிர்ஷ்டம் சிறந்த பலனைத் தரும்.

கடகம் வேலை / தொழில்:

பணியில் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கடகம் காதல் / திருமணம்:

நீங்களும் உங்கள் துணையும் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். இதன் மூலம் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு

கடகம் பணம் / நிதிநிலைமை:

நிதிநிலையில் ஸ்திரத்தன்மை காணப்படும். கணிசமான தொகை சேமிப்பீர்கள்.

கடகம் ஆரோக்கியம்:

உங்களின் தேக ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் காரணமாக இன்று சிறப்பான ஆரோக்கியம் காணப்படும்

சிம்மம்:

சிம்மம் பொதுப்பலன்கள்:

இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். நிறைய வாய்ப்புகள் காணப்படும். இன்றைய நாளை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இன்று திருப்தி நிறைந்து காணப்படும்.

சிம்மம் வேலை / தொழில்:

நீங்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுவீர்கள். கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்து உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

சிம்மம் காதல் / திருமணம்:

உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் திருப்தியாக உணர்வீர்கள். இருவரும் தரமான நேரத்தை இணைந்து செலவழிப்பீர்கள்.

சிம்மம் பணம் / நிதிநிலைமை:

இன்று நிதி வளர்ச்சி சீராக இருக்கும். குடும்ப நலத்திற்காக பணத்தை செலவு செய்வீர்கள்.

சிம்மம் ஆரோக்கியம்:

இன்று திடமாகவும் வலிமையாகவும் காணப்படுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:

கன்னி பொதுப்பலன்கள்:

கன்னி பொதுப்பலன்கள்:

உங்கள் மனதில் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். இந்தப் போக்கை நீங்கள் சமாளிக்க வேண்டும். கடினமான சூழ்நிலை காரணமாக இன்று சுமையான நாளாக உணர்வீர்கள்.

கன்னி வேலை / தொழில்:

இன்று பணியிடத்தில் பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய கவனமாகப் பணியாற்ற வேண்டும். சிறப்பாக திட்டமிடுவதன் வெற்றி சாத்தியப்படும்.

கன்னி காதல் / திருமணம்:

உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் ஆரோக்கியமான உறவு முறை காணப்படும்.

கன்னி பணம் / நிதிநிலைமை:

இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் காரணமாக பணத்தை சேமிப்பீர்கள்.

கன்னி ஆரோக்கியம்:

இன்று கண் எரிச்சல், முதுகுவலி, மற்றும் கால் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். பிரார்த்தனை மற்றும் இறை மந்திரங்கள் சிறந்த பலனைத் தரும்.

துலாம்:

துலாம் பொதுப்பலன்கள்:

இன்று கடினமான சூழ்நிலை கானப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளவேண்டும். உங்கள் முயற்சி மற்றும் சிறப்பாக திட்டமிடுவதன் மூலம் உங்கள் இலக்குகளை அடையலாம்.

துலாம் வேலை / தொழில்:

பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். சிறந்த பலனைக் காண நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

துலாம் காதல் / திருமணம்:

தவறான புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையுடன் பிரச்சினை ஏற்படலாம். இருவரும் ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்துகொள்ள தவறுவீர்கள்.

துலாம் பணம் / நிதிநிலைமை:

இன்று பண இழப்பு ஏற்படலாம். எனவே பணத்தை கவனமாக கையாள வேண்டும்.உங்கள் உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம்.

துலாம் ஆரோக்கியம்:

பதட்டம் காரணமாக தோள் வலியால் பாதிக்கப்படலாம். அமைதியாக இருக்கவும்.லேசாக எடுத்துக் கொள்ளவும்.

விருச்சிகம்:

விருச்சிகம் பொதுப்பலன்கள்:

இன்று வருத்தத்துடன் காணப்படுவீர்கள். உணர்ச்சி வசப்படக் கூடிய நிலை இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. சமாளித்து அமைதியாக இருக்க வேண்டும். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

விருச்சிகம் வேலை / தொழில்:

சவாலான பணிகள் காணப்படுவதால் ஓய்வெடுக்க நேரம் காணாது. எனவே திட்டமிட்டு உங்கள் பணிகளை ஆற்ற வேண்டும்.

விருச்சிகம் காதல் / திருமணம்:

உங்கள் துணையிடம் பேசும் போது உணர்ச்சிவசப்படுவீர்கள். உறவில் நல்லிணக்கம் உருவாக இத்தகைய உணர்வுகளை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம் பணம் / நிதிநிலைமை:

இன்று குடும்பத் தேவைக்காக பணம் செலவு செய்வீர்கள். பொறுப்புகள் அதிகம் காணப்படுவதால் செலவுகள் அதிகமாக இருக்கும்.

விருச்சிகம் ஆரோக்கியம்:

ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. செரிமானம் சம்பந்தமான பிரச்சினை ஏற்படும்.

தனுசு:

தனுசு பொதுப்பலன்கள்:

இன்று உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும். நீங்கள் இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

தனுசு வேலை / தொழில்:

உங்கள் செயல்திறனில் திறமையை வெளிபடுத்துவீர்கள். உங்கள் திறமை மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும்.

தனுசு காதல் / திருமணம்:

உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை பராமரிப்பீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் காணப்படும்.

தனுசு பணம் / நிதிநிலைமை:

இன்று பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சிறிய அளவிலான கடன் வாங்குவீர்கள்.

தனுசு ஆரோக்கியம்:

உங்களிடம் இன்று ஆற்றல் நிறைந்து காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள்..

மகரம்:

மகரம் பொதுப்பலன்கள்:

இன்றைய கடினமான சூழ்நிலையை சமாளிக்க உங்களுக்கு பொறுமை தேவை. எந்தவித இழப்பும் ஏற்படாத வகையில் திட்டமிட வேண்டும். இன்று உறுதியான அணுகுமுறை தேவை.

மகரம் வேலை / தொழில்:

பணியிடச் சூழல் சுமூகமாக இருக்காது. உங்கள் செயல்களில் தாமதங்கள் காணப்படும். இது உங்களுக்கு மிகுந்த கவலையை உண்டாக்கும்.

மகரம் காதல் / திருமணம்:

உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். மகிழ்ச்சியை தக்க வைக்க உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

மகரம் பணம் / நிதிநிலைமை:

இன்று பயணத்தின்போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

மகரம் ஆரோக்கியம்:

இன்று கால் வலியால் அவதிப்பட நேரலாம். தியானம் மற்றும் யோகா மேற்கொள்வது சிறந்தது.

கும்பம்

கும்பம் பொதுப்பலன்கள்:

இன்று நீங்கள் அதிகம் எதிர்பார்க்க இயலாது. என்றாலும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நேர்மறை கண்ணோட்டம் இன்று மிகவும் அவசியம்.

கும்பம் வேலை / தொழில்:

நீங்கள் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் பணிகளில் தாமதங்களை சந்திப்பீர்கள். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.

கும்பம் காதல் / திருமணம்:

உங்கள் துணையிடம் பேசும் போது உணர்ச்சிவசப்படுவீர்கள். உறவில் நல்லிணக்கம் உருவாக இத்தகைய உணர்வுகளை தவிர்க்க வேண்டும்.

கும்பம் பணம் / நிதிநிலைமை:

இன்று நிதிநிலை சிறப்பாக காணப்படாது. இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். பணத்தை சேமிக்க இயலாது.

கும்பம் ஆரோக்கியம்:

உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.

மீனம்:

மீனம் பொதுப்பலன்கள்:

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் இலக்குகளை நம்பிக்கையுடன் அமைத்துக் கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களிடம் நல்ல உறவு முறையைப் பராமரிப்பீர்கள்.

மீனம் வேலை / தொழில்:

உங்கள் சக பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

மீனம் காதல் / திருமணம்:

இன்று இனிமையான நாளாக உணர்வீர்கள். உங்கள் துணையுடன் நட்பாக நடந்து கொள்வீர்கள்.

மீனம் பணம் / நிதிநிலைமை:

இன்று பண வரவு அதிகமாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் காரணமாக உங்கள் சேமிப்பு உயரும்.

மீனம் ஆரோக்கியம்:

இன்று உங்களிடம் நம்பிக்கை உணர்வு நிறைந்து காணப்படும். இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

You might also like