கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தின் கீழ் 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை செய்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் குளத்து நீர் பத்தடியில் காணப்படுவதனால் குளத்தின் நீரின் அளவை கருத்திற் கொண்டு கிளிநொச்சி மருதநகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் சிறுபோக நெற்செய்கை செய்ய இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, இரணைமடு திட்ட முகாமைத்துவ அலுவலகத்தில் இரனைமடுத் திட்டப்பணிப்பளரும் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளருமான எந்திரி நவரத்தினம் சுதாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 2017 ஆம் ஆண்டிற்கான இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக பயிர்ச் செய்கைக்கான முன்னோடிக்கூட்டமும் திட்ட முகாமைத்துவ குழுவினுடைய எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆராயப்பாட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தின் முடிவுகள் எதிர்வரும் வாரங்களில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற உள்ள சிறுபோக பயிர்ச்செய்கை கூட்டத்தில் இறுதி முடிவாக நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like