அடிக்கடி தாலியை கழட்டி வைக்கும் மனைவி: அதிரடி முடிவெடுத்த கணவன்

மனைவி அடிக்கடி தாலியை கழட்டி வைப்பதால் விவாகரத்து கோரி கணவன் தாக்கல் செய்த மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தன்னுடைய மனைவி அடிக்கடி தாலியை கழட்டி வைப்பதாகவும், குங்குமம் வைத்துக்கொள்ள மறுப்பதோடு தலையில் முந்தானையைக் கொண்டு மூட மறுக்கிறார்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என தெரிவித்த அவர், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிமதிகள், “இதுபோன்ற கலாச்சார ரீதியான வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என பெண்களை நிர்பந்திக்கக்கூடாது.

தாலி கட்டிக்கொள்வது, குங்குமம் வைத்துக்கொள்வது, முந்தானையை வைத்து தலையை மூடுவதெல்லாம் பெண்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.

21-ம் நூற்றாண்டில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கெல்லாம் விவாகரத்து கேட்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்திய சட்டப்படி கலாச்சார ரீதியான சடங்குகளை பின்பற்ற, யாரும் யாரையும் நிர்பந்திக்கூடாது எனவும் நீதிபதிகள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

You might also like