நிறைமாத கர்ப்பிணி அடித்துக் கொலையா? கணவர் மீது பரபரப்பு புகார்

தமிழ்நாட்டில் பெண் காவலர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையை சேர்ந்தவர் வீரராகவன், இவர் மனைவி சர்மிளாதேவி (25)

சர்மிளா மாவட்ட ஆய்தபடையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு விகாஷ் என்ற ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது சர்மிளா மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.

இதனிடையில் கணவன் மனைவி இருவருக்கு திடீர் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த சர்மிளா வீட்டின் மாடி அறையில் நேற்று தூக்கில் தொங்கினார்.

பின்னர் வீரராகவனின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையில் சர்மிளா பெற்றோர், தனது மகளை வீரராகவனும் அவர் குடும்பத்தினரும் அடித்து கொலை செய்து விட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

You might also like