குழந்தை இறந்துவிட்டதாக உறுதிப்படுத்திய மருத்துவமனை: புதைக்கும் போது உயிர் வந்த அதிசயம்
இந்தியாவில் பிரசவத்தில் பிறந்த குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை கூறிய நிலையில், குழந்தை உயிருடன் இருப்பதை பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் துர்கேஷ் ரத்தோர் (25) இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து துர்கேஷ் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அப்போது அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை.
அதனால் அங்கிருந்த செவிலியர்கள் துர்கேஷ்க்கு பிரசவம் பார்த்துள்ளனர். வெறும் 6 மாதத்தில் துர்கேஷக்கு குறை பிரசவம் ஆகியுள்ளது.
குழந்தை பிறந்தவுடன் அது அசையாமலும், மூச்சுவிடாமலும் இருந்துள்ளது. இதையடுத்து குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர்கள் குழந்தையின் பெற்றோரிடம் குழந்தையை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து குழந்தையை புதைக்க அவர்கள் எடுத்து சென்ற போது குழந்தைக்கு இதய துடிப்பு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மீண்டும் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து வந்த போது அங்கு மருத்துவர் வந்திருந்தார்.
குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் அதற்கு தற்போது தீவிர சிகிச்சையளிக்கபட்டு வருகிறது.
குழந்தை பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையில், மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் குழந்தை இறந்ததாக கூறிய செவிலியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.